எல்லோருக்கும் வணக்கம்,
இன்று ஒரு விசேஷ தினம். அமெரிக்காவில் ஒரு வரலாற்று சம்பவம். மார்ட்டின் லூதர் கிங் தனது கறுப்பின மக்களின் சுதந்திரம் ,வாழ்க்கை தரம் மற்றும் , வாழ்க்கை முறைக்காக பாடு பட்டு அதன் அறை நூற்றாண்டுக்கு பிறகு கிடைத்த வெற்றி. அஜித்தின் வசனப்படி " இது ஒரு கருப்பு ( கறுப்பின) சரித்திரம்".
ஓபாமாவின் இந்த வெற்றி ஒரு குறிப்பிட்ட இன அல்லது நிற மக்களின் வெற்றியாக இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றியாக கருதவேண்டும்.
இத்தனைக்கும் இவரது நடுப்பெயர் "உஸேண்" . பெயரிலே இசுலாமியராக இருந்தாலும் இவர் வளர்க்கப்பட்டது கிருஸ்துவர்களால்.
ஓபாமாவின் வெற்றியின் ஏற்ப்புரை என்னை மிகவும் கவர்ந்தது. அது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியின் பேச்சாக மட்டும் இல்லாமல் உலகத்தில் உள்ள அனைவருக்குமான பேச்சாக இருந்தது.
அவரின் பேச்சு உள்ள வலைப்பதிவு இதோ. ( http://news.bbc.co.uk/1/hi/world/americas/us_elections_2008/7710079.stm) .
எனது அடுத்த பதிவில் இத்தனை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறேன்.
நன்றி
No comments:
Post a Comment